கணவனின் சடலத்தை கொண்டுவருவதற்காவது உதவுங்கள்! யாழ்.சாவகச்சேரி இளைஞனின் மனைவி உருக்கம்..

ஆசிரியர் - Editor I
கணவனின் சடலத்தை கொண்டுவருவதற்காவது உதவுங்கள்! யாழ்.சாவகச்சேரி இளைஞனின் மனைவி உருக்கம்..

பொருளாதார நெருக்கடி காரணமாகவே எனது கணவன் வெளிநாடு செல்வதற்கு முயற்சித்தார் எனவே தனது கணவருடைய சடலத்தை இலங்கைக்கு எடுத்துவருவதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கும்படி வியட்நாமில் உயிரிழந்த யாழ்.சாவகச்சேரி இளைஞனின் மனைவி உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

படகு மூலம் கனடாவுக்கு செல்ல முயற்சித்த நிலையில் வியட்நாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது உயிரிழந்த யாழ்.சாவகச்சேரி இளைஞனின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு அதிக பணம் கேட்கப்படும் நிலையில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 

பொருளாதாரச் சூழல் காரணமாகவே தனது கணவன் புலம்பெயர்ந்து சென்றதாகவும், இங்கு ஏற்கனவே செய்து வந்த தொழில் நடவடிக்கைகளையும் கணவன் விற்பனை செய்து, 

அதன் மூலம் பெற்ற பணத்திலேயே கனடாவிற்குச் சென்றார் என கூறும் மனைவி, கணவனின் உடலை எடுத்துவர தமிழ் அரசியல்வாதிகள் உட்பட

அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மக்கள் வரிப்பணத்தில் மணைவிக்கு சேலை வாங்கும் வடக்கு அதிகாரி ..

மேலும் சங்கதிக்கு