ஆபத்தான கைக்குண்டுடன் வீடுகளுக்குள் நுழைந்து மிரட்டிக் கொள்ளை! இரு கொள்ளையர்கள் சிக்கினர்..

ஆசிரியர் - Editor I
ஆபத்தான கைக்குண்டுடன் வீடுகளுக்குள் நுழைந்து மிரட்டிக் கொள்ளை! இரு கொள்ளையர்கள் சிக்கினர்..

வீடுகளுக்குள் புகுந்து கைக்குண்டை காண்பித்து கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

காங்கேயனோடை பிரதேசத்தில் வீடொன்றை உடைத்து பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்ட நபர்களே இவ்வாறு கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான நபர்களிடமிருந்து கையடக்க தொலைபேசிகள், 50 ஆயிரம் ரூபாய் பணம், வாசனைத் திரவியங்கள் உட்பட வீட்டு பாவனைப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளது. 

இப்பிரதேசத்தில் கைக்குண்டைக் காண்பித்து மிரட்டிகொள்ளைச் சம்பவத்தில் நீண்டநாட்களாய் ஈடுபட்டுவந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளனர். காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மக்கள் வரிப்பணத்தில் மணைவிக்கு சேலை வாங்கும் வடக்கு அதிகாரி ..

மேலும் சங்கதிக்கு