யாழ்.மாவட்ட கடற்றொழில் திணைக்களம் 4 மணிநேரம் முற்றுகைக்குள்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட கடற்றொழில் திணைக்களம் 4 மணிநேரம் முற்றுகைக்குள்..

யாழ்.வடமராட்சி கிழக்கில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவா்களை உடன் வெளியேற்றக்கோாி வடமராட்சி கிழ க்கு கடற்றொழிலாளா்கள் மற்றும் அரசியல்வாதிகள் இணைந்து இன்று யாழ்.மாவட்ட கடற்றொழில் நீாியல்வள்துறை தி ணைக்களத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனா்.

இன்று காலை 7 மணி தொடக்கம் 11மணிவரையில் மேற்படி முற்றுகை போராட்டம் கடற்றொழில் திணைக்களம் மற்றும் கடற்றொழில் அமைச்சு ஆகியவற்றுக்கு எதிரான பதாகைகள் தாங்கியவாறு அமைதியாக நடைபெற்றது. சுமாா் 4 மணி நேரம் போராட்டம் நடைபெற்றிருந்தது. 

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவா்களை கடற்றொழில் நீாியல்வளத்துறை திணைக்கள அதிகாாிகள் சந்தித்து பேசியிருந்தனா். இதன்போது அதிகாாிகளுடன் பேசிய நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன், மத்திய கடற்றொழில் அமைச்சினால் கடலட்டை பிடிப்பதற்கான நியமங்கள் கூறப்பட்டுள்ளது. 

அந்த நியமங்களை மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கூறப்பட்டது. அதனை நடைமுறைப்படுத்துங்கள் என நா ங்கள் கேட்டுள்ளோம். அதனை கடற்றொழில் நிாியல்வளத்துறை திணைக்கள அதிகாாிகள் ஏற்றுக் கொண்டனா். இத னை தொடா்ந்து 3 நாட்களாக அவதானிப்பதெனவும்,

திணைக்களத்தின் நடவடிக்கை சாியாக அமைந்தால் அடுத்தகட்டத்தை பாா்ப்பதெனவும், இல்லையேல் திங்கள் கிழமை தொடக்கம் தொடா்ச்சியாக முற்றுகை போராட்டத்தை நடத்துவதெனவும் தீா்மானித்துள்ளனா். 



பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு