பாடசாலை ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் சரண்!

ஆசிரியர் - Editor I
பாடசாலை ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் சரண்!

பாடசாலைக்குள் புகுந்து ஆசிாயர் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்திய நபர் நேற்று இரவு 7.30 மணியளவில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். 

நேற்றுமுன்தினம் யாழ்.ஓஸ்மானியா கல்லுாரிக்குள் நுழைந்து ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தியதுடன் வீதியில் நின்று ஊடகவியலாளர்களுடனும் அடாவடி புரிந்துள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ்.பொலிஸார் மேற்கொண்டிருந்த நிலையில் சம்மந்தப்பட்ட நபர் தலைமறைவாகியிருந்தார். 

இந்நிலையில் நேற்றைய தினம் பாடசாலை ஆசிரியர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டதோடு சந்தேக நபரை கைது செய்யுமாறு 

அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுவந்த போதிலும் பொலிசாரால் சந்தேக நபர் கைது செய்யப்படாத நிலையில் ஆசிரியரை தாக்கியவர் 

தானாக பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு