தெளிவான சட்டம் உள்ள ஓர் நாட்டில் தேர்தல் முடிவுகள் கிடைக்கும் வரையில் தெளிவின்மையாகவே இருக்கும் ..
தெளிவான சட்டம் உள்ள ஓர் நாட்டில் தேர்தல் முடிவுகள் கிடைக்கும் வரையில் தெளிவின்மையாகவே இருக்கும் எனவும் தெளிவற்ற சட்டம் உள்ள நாடுகளில் அதன் முடிவுகள் தெளிவாக இருக்கும் என பொதுநலவாய நாடுகளின் தேர்தல் தொடர்பான விபரம் தெரிவிப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் இரட்ண ஜீவன் கூல் தெரிவித்தார்.
வாக்காளர் தினத்தினை முன்னிட்டு யாழ்.முற்றவெளியில் இருந்து மாவட்டச் செயலகம் வரையில் இடல்பெற்ற விழிப்புணர்வு நடைபவனியினைத் மொடர்ந்து மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் இது தொடர்பில் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,
தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பல கடமைகள் உண்டு . அதில் பிரதான கடமைகளில் தேர்தல் சட்டத்தை பேனுவதும் ஒன்று. அவ்வாறு சட்டத்தையும் பேடும் ஓர் நாடா ஜனநாயக நாடாகும். சட்டத்தின் கீழ் நடாத்தப்படும் நாடுகளும் சட்டத்தின் கீழ் நடாத்தப்படாத நாடுகளும் உண்டு. எமது நாடு சட்டத்தின் கீழ் நடாத்தப்படும் நாடு என்றே சொல்லப்படுகின்றது.
இருப்பினும் சட்டத்தின் கீழ் நடாத்தப்படுகின்றதா என்ற கேள்வியும் உண்டு. உலகின் எல்லா நாட்டிலும் குறைகள் உண்டு. ஆனால் அந்த குறையின் அளவைப் பொருத்தே அந்த நாட்டின் தன்மை தீர்மானிக்கப்படுகின்றது. இலங்கையில் எல்லாத்திற்கும் சட்டம் உண்டு. அவ்வாறானால் ஏன் தவறு நிகழ்கின்றது. சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில்லை. அதாவது சட்டத்தை முறிக்காமல் மீறுவதாகும். இதற்கு 17ம் திருத்தச் சட்டத்திற்கு நடந்த சம்பவமும் ஓர் உதாரணம்.
அதாவது சந்திரிக்கா மற்றும் மகிந்த போன்றோர் ஒருவரையும் நியமிக்கவில்லை. அதேபோன்று இந்த நாட்டில் குறுகிய காலத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் எனக் கூறப்பட்டும். இவற்றிற்கு வழக்குப் பதியப்படவில்லை. இதுவும் சட்டம் இருந்தும் அதை நடைமுறைப் படுத்தாமையே ஆகும்.
தேர்தல் நேர்மையாக நடந்த்து எனக் கூறுவது வாக்கினை மிகச் சரியாக கணக்கிடுவது மட்டுமல்ல. 2014ம் ஆண்டு இந்த நாட்டில் ஓர் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கே அடி விழுந்தது. ஆனால் இன்று வரை வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அப்படியானால் நாம் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவா என்ற கேள்வி எழுகின்றது. இப்பவும் அரசர் ஆட்சியை ஒத்த ஆட்சிதான்.
அதேபோன்று இறுதியாக நடந்த உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பிலும் பல விடயங்கள் உண்டு. இதேநேரம் இவற்றை நேர்த்தியாக செய்ய சரியான வரம்புகள் இருக்க வேண்டும். எமக்கு வரும் முறைப்பாட்டை துணிந்து முன்கொண்டு செல்லவும் வரம்புகள் சீர் திருத்தப்பட வேண்டும்.
தற்போது மாகாண சபைத் தேர்தல் நடாத்த தயாராகின்றோம். ஆனால் அது தொடர்பில் சட்டம் தெளிவில்லை. அதனைவிட தேர்தலை நடாத்த அரசும் தயாரில்லை போன்றே தெரிகின்றது. அரசு தயாராகும்போதுதான் சட்டம் நேர்த்தியாக்கப்பட்டாலும் அது ஜனநாயகத்தின் கேள்விக்குறியாகவே இருக்கும். என்றார்.