SuperTopAds

இந்தோனேசியா நிலநடுக்கத்தின் எதிரொலி!! -அபத்தான சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு-

ஆசிரியர் - Editor II
இந்தோனேசியா நிலநடுக்கத்தின் எதிரொலி!! -அபத்தான சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு-

இந்தோனேசியாவில் திடீரென ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக ஆபத்தான சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா 'நெருப்பு வளையம்' என்று அழைக்கப்படும் புவித்தட்டுகள் அடிக்கடி நகருகிற இடத்தில் அமைந்துள்ளது. இதனால் அங்கு நிலநடுக்கம் என்பது வாடிக்கையான ஒன்றாக உள்ளது.

இந்தநிலையில், சாலமன் தீவுகளில் உள்ள தெற்கு மலாங்கோ பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 7 ஆக பதிவாகி உள்ளது.

நிலநடுக்கத்தின் அதிர்வால் வீடுகள், அலுவலகங்கள், கடைகள் உள்ளிட்ட கட்டிங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்தப்படி கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளிலும், திறந்தவெளி மைதானங்களிலும் அடைக்கலம் புகுந்தனர்.

சாலமன் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட ஜாவா தீவில் நேற்று திங்கட்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 162 பேர் உயிரிழந்த நிலையில் சாலமன் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.