இந்திய அமைதிப்படையால் வழிபடப்பட்ட முருகன் ஆலயம் கண்டுபிடிப்பு..

ஆசிரியர் - Editor I
இந்திய அமைதிப்படையால் வழிபடப்பட்ட முருகன் ஆலயம் கண்டுபிடிப்பு..

யாழ்.மாவட்டத்தில் இந்திய அமைதிப்படை நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் அவர்களால் வழிபாடு செய்யப்பட்ட முருகன் ஆ லயம் பற்றை காடு துப்புரவு செய்யும்போது வெளிவந்துள்ளது.

1989ம் ஆண்டு இந்திய அமைதிப்படை நிலை கொண்டிருந்தபோது தமிழகத்தை சேர்ந்த இராணுவ வீரர்கள் இந்த ஆலயத்தை வழிபட்டுள்ளனர்.

இந்த ஆலயத்தில் இந்திய அமைதிப்படையில் பணியாற்றிய தமிழகத்தை சேர்ந்த  இந்திய இராணவத்தினருடைய பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலயம் யாழ் தொண்டைமணாறு செல்வச்சன்நிதி கோவிலுக்கு எதிராக சுமார் 1km தூரத்தில் இது காணப்படுகிறது.

தொண்டைமணாறு துருசு திருத்தப்பணி இடம்பெற்றுவருகிறது. இதன்போது பற்றைக் காடுகள் துப்பரவு செய்யும் போது இக் கோவில் தெரியவந்துள்ளது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு