8 மில்லியன் ரூபாய் செலவில் சங்கரத்தை சின்னம்மா வித்தியாசாலை அங்குரார்ப்பணம்..

ஆசிரியர் - Editor I
8 மில்லியன் ரூபாய் செலவில் சங்கரத்தை சின்னம்மா வித்தியாசாலை அங்குரார்ப்பணம்..

யாழ்.சங்கரத்தை சின்னம்மா வித்தியாசாலையின் புதுப்பிக்கப்பட்ட கட்டிடத்தொகுதியும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் இன்று காலை பாடசாலையின் அதிபர் ப.சிவலோகநாதன் தலைமையில் இடம்பெற்றது.

இதன் பொழுது விருந்தினர்களால் புதிதாக புனரமைப்பு பெற்ற வித்தியாசாலைவளாகம் நாடாவெட்டி திறந்து வைக்கப்பட்டதோடு,

நிறுவுனர் சிலையும் நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட பேராசிரியர் ராஜராஜன் மற்றும் அகிலா ராஜராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வித்தியாசாலையின் நிறுவுனரின் பேரன் ஜசிதன் ராஜலதனால் திறந்து வைக்கப்பட்டது.

தொடர்ச்சியாக மாணவர்களின் நலன் கருதி உருவாக்கப்பெற்ற திறன் வகுப்பறையும்(smart calss room) அங்குரார்பனம் செய்து வைக்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து மாணவர் கலைநிகழ்வுகளும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் இடம்பெற்றது.

இந்நிகழ்வின போது சங்கரத்தை சின்னம்மா வித்தியாசாலையின் அதிபர்ப.சிவலோகந்தன், பேராசிரியர் ராஜராஜன்,திருமதி அகிலா ராஜராஜன்,வலிகாமம் வலயக்கல்வி பணிப்பாளர் பொ. ரவிச்சந்திரன்,

வித்தியாசாலை நிறுவுனரின் பேரன் ஜஷிதன் ராஜஸ்தான்,நடேசன்,சக்கரத்தை உபதபாலதிபர்,  பழைய மாணவர் சங்க செயலாளர் செந்தில்குமார்,

விரிவுரையாளர் ஆஷா ,பழைய மாணவர்கள் ,சமூக மட்ட அமைப்பினர், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த வித்தியாலையின் புனரமைப்பிற்கு எட்டு மில்லியன் ரூபாய் நிதிப் பங்களிப்பை பேராசிரியர் ராஜராஜன் மற்றும் திருமதி அகிலா ராஜராஜன் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு