யாழ்.தெல்லிப்பளை உளநல மருத்துவமனையிலிருந்து காணாமல்போன அம்புலன்ஸ், மாகாண சுகாதார திணைக்கள பயன்பாட்டில் உள்ளதாம்! மாகாண சுகாதார பணிப்பாளரின் சாதனை...

ஆசிரியர் - Editor I
யாழ்.தெல்லிப்பளை உளநல மருத்துவமனையிலிருந்து காணாமல்போன அம்புலன்ஸ், மாகாண சுகாதார திணைக்கள பயன்பாட்டில் உள்ளதாம்! மாகாண சுகாதார பணிப்பாளரின் சாதனை...

யாழ்.தெல்லிப்பளையில் உள்ள உளநல மருத்துவ பிரிவுக்கு வழங்கப்பட்ட நவீன அம்புலன்ஸ் வண்டியை மாகாண சுகாதார பணிப்பாளர் திலீப் லியனகே தனது திணைக்கள பயன்பாட்டிற்கு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நெதர்லாந்து நாட்டின் அன்பளிப்பாக தெல்லிப்ளை உள நல மருத்துவமனை பயன்பாட்டுக்கு என குறித்த ஆம்புலன்ஸ் வண்டி வழங்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள 15 பிரதேச செயலகங்களுக்கும் பொதுவாக உளநல பாதிக்கப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு ஏற்றிச் செல்வது, 

அவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு என குறித்த அம்புலன்ஸ் வண்டி பயன்பாட்டில் இருந்தது. இந்நிலையில் வடமாகாண சுகாதார பணிப்பாளராக பதவியேற்ற பின்னர் குறித்த ஆம்புலன்ஸ் வண்டியை வடமாகாண சுகாதார திணைக்களத்தின் பயன்பாட்டிற்ககாக பெற்றுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளருக்கு தெரிந்திருந்தும் மதில் மேல் பூனையாக உள்ளார் என சுகாதாரத் திணைக்கள வட்டாரங்கள் குற்றம் சாட்டின.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு