நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட 6 பேரின் விடுதலைக்கு எதிராக மறு ஆய்வு மனு!! -இந்திய அரசு தாக்கல் செய்தது-

ஆசிரியர் - Editor II
நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட 6 பேரின் விடுதலைக்கு எதிராக மறு ஆய்வு மனு!! -இந்திய அரசு தாக்கல் செய்தது-

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்டோரை விடுதலை செய்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசு சார்பில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளியான பேரறிவாளனை உச்ச நீதிமன்றத்தால் அதன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்யப்பட்டிருந்தார். இதை அடிப்படையாகக் கொண்டு சாந்தன், முருகன், நளினி, ரோபர்ட் பையாஸ், ரவிச்சந்திரன் மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்ட சிறையில் இருந்த மற்ற குற்றவாளிகள் 6 பேரும் கடந்த 12 ஆம் திகதி உச்ச நீதிமன்றத்தால் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

இதற்கு தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்திருந்தாலும் காங்கிரஸ் கட்சி கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்திருந்தது. சிறையிலிருந்து வெளி வந்ததற்கு பின் நளினி செய்தியாளர்களை சந்தித்தது உள்ளிட்டவையும் விமர்சிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசு சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

தங்கள் தரப்பு வாதங்களை முழுமையாக கேட்காமல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டிருப்பதாகவும், எனவே முந்தைய தீர்ப்பை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என மனுவின் இந்திய அரசு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 12 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு சொலிஸ்ட்டர் ஜெனரல், கூடுதல் சொலிஸ்டர் ஜெனரல் உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாமல் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு