வோர்னர் - ஸ்மித் அதிரடி!! -இங்கிலாந்தை 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய-

ஆசிரியர் - Editor II
வோர்னர் - ஸ்மித் அதிரடி!! -இங்கிலாந்தை 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய-

இங்கிலாந்து - அவுஸ்திரேலிய அணிகள் மோதிக் கொண்ட முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 287 ஓட்டங்களை பெற்று கொண்டது. 

துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பாக டேவிட் மாலன் 134 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணியின் எடம் சாம்பா, பேட் கம்மின்ஸ் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

பதிலளித்தாடிய அவுஸ்திரேலிய அணி 46.5 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் அவுஸ்ரேலிய அணி சார்பாக டேவிட் வோர்னர் ஆட்டமிழக்காது 86 ஓட்டங்களையும் ஸ்டீவ் ஸ்மித் ஆட்டமிழக்காது 80 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு