எரிபொருள் வாங்கி தருவதாக கூறி 5 லட்சம் ரூபாய் நம்பிக்கை மோசடி! யாழ்.பலாலி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகஸ்த்தர் கைது..

ஆசிரியர் - Editor I
எரிபொருள் வாங்கி தருவதாக கூறி 5 லட்சம் ரூபாய் நம்பிக்கை மோசடி! யாழ்.பலாலி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகஸ்த்தர் கைது..

எரிபொருள் பெற்றுத் தருவதாக கூறி சுமார் 5 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்ட பொலிஸ் உத்தியோகஸ்த்தர் எரிபொருளை பெற்றுக் கொடுக்காததுடன், பணத்தையும் திருப்பிக் கொடுக்காமைக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்த்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டு பருத்தித்துறை நீதிவான் பொன்னுத்துரை கிரிசாந்தன் முன்னிலையில் முற்படுத்தியபோது 17ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். 

பலாலி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அப்பகுதியைச்சேர்ந்த நபர் ஒருவரிடம் எரிபொருள் பெற்றுத்தருவதாக கூறி ஐந்து லட்சம் பணம் பெற்றுள்ளார் அவர் எரிபொருள் நிரப்பி கொடுக்காததால் பணத்தை மீளக்கேட்டும் வழங்காத காரணத்தால் 

வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு காங்கேசந்துறை விசேட குற்றப்பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டது அதனைத் தொடர்ந்து பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

பருத்தித்துறை நீதவான் பொன்னுத்துரை கிரிசாந்தன் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட பலாலி பொலிஸ் உத்தியோகத்தரை 17ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு