SuperTopAds

போருக்கு உடன் தயாராகுங்கள்!! -சீன இராணுவத்திற்கு ஜனாதிபதி உத்தரவிட்டதால் பெரும் அச்சம்-

ஆசிரியர் - Editor II
போருக்கு உடன் தயாராகுங்கள்!! -சீன இராணுவத்திற்கு ஜனாதிபதி உத்தரவிட்டதால் பெரும் அச்சம்-

போருக்கு உடனடியாக தயாராகுமாறு சீனா இராணுவத்தினருக்கு அந்நாட்டின் ஜனாதிபதி ஜின் பிங் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். 

மக்கள் விடுதலை இராணுவத்தின் தலைமையகமான மத்திய இராணுவ ஆணையத்தின் கூட்டுப் பணியாளர்கள் துறையை பார்வையிட்ட ஜின் பிங், உலகம் 100 ஆண்டுகளில் இல்லாத ஆழமான மாற்றங்களை சந்தித்து வருவதாக கூறி உள்ளார்.

அப்போது இராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ஜின்பிங், போருக்கு தயாராகி சீனாவை புதிய சகாப்தத்திற்கு அழைத்து செல்ல வேண்டும். சீனாவில் ஆயுதப்படை பயிற்சி மற்றும் தயாரிப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்று கூறி உள்ளார்.

ஒட்டுமொத்த ராணுவமும், அனைத்து ஆற்றலையும் அர்ப்பணித்து போருக்கான தயார் நிலைக்கு அதன் அனைத்து பணிகளையும் செய்ய வேண்டும். போராடி வெற்றி பெறும் திறனை அதிகரிக்க வேண்டும். புதிய சகாப்தத்தில் பணிகளை திறம்பட செய்ய வேண்டும் என்று அவர் கூறி உள்ளார்.

மேலும் சமீபத்திய உலகளாவிய நிகழ்வுகள் சீனாவின் பாதுகாப்பு சூழ்நிலையில், உறுதியற்ற தன்மை மற்றும் நிச்சயமற்ற தன்மையை தூண்டி உள்ளது. அதனால் தான் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவனம் தனது புதிய தசாப்தத்தில் உள்ள பணிகளை நிறைவேற்ற வேண்டும். மேலும், கட்டளைகள் மற்றும் செயல்பாட்டில் புதிய மாற்றங்களை வேண்டும் என்று ஜின்பிங் தெரிவித்ததாக அந்த நாட்டின் அரசு ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

ரஷ்யா - உக்ரைன் போர், சீனா - தைவான் இடையேயான பதற்றம் ஆகியவற்றில் சீனாவின் நிலைப்பாடுகள் மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக இருக்கும் நிலையில், வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் சீனாவை முதன் மைபடுத்தும் வகையில் ஜின்பிங் இவ்வாறு பேசியிருப்பதாக கூறப்படுகிறது.