உக்ரைனிலிருந்து தப்ப ஓடி வந்த பெண்ணை திருமணம் செய்த பிரித்தானியர்!!
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அந்நாட்டிலிருந்து உயிர் தப்ப ஓடி வந்த பெண் ஒருவருக்கு உதவ முடிவு செய்த பிரித்தானியர் ஒருவர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்திய இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:-
உக்ரைனில் கணக்காளராக பணியாற்றி வந்த 37 வயதான விரா கிளிமோவா என்பவர் போர் காரணமாக அங்கிருந்து தப்பித்து நண்பர்கள் சிலர் உதவியுடன் பிரித்தானியாவின் பிரிஸ்டல் என்ற இடத்தை வந்தடைந்துள்ளார்.
அங்கு வந்த அப் பெண் உக்ரைனிலிருந்து தப்பி வருபவர்களுக்கு உதவும் நோக்கில் முகப்புத்தக குழு ஒன்றை நடத்தி வரும் 28 வயதான லூக் டிக்கின்சன் என்பரை தொடர்பு கொண்டுள்ளார்.
அந்த பெண்ணுக்கு உதவுவது என முடிவு செய்திருந்த லூக் டிக்கின்சன் தற்செயலாக ஏசையவின் புகைப்படம் கண்ணில் பட, உடனே அவரிடம் தன் மனதைப் பறிகொடுத்துவிட்டார்.
இதன் படி இருவரும் இருவரும் பழகிவந்த நிலையில், ஒரு கட்டத்தில் தன் மனதில் உள்ள எண்ணத்தை லூக் டிக்கின்சன் வெளிப்படுத்தியுள்ளார். இதில் என்ன பிரச்சினை என்றால் லூக் டிக்கின்சனுக்கு உக்ரைன் மொழி தெரியாது, ஏசையவுக்கு ஆங்கிலம் சுத்தமாகத் தெரியாது.
அப்போது இருவருக்கும் கூகிள் மொழிபெயர்பு கைகொடுத்தது. தாங்கள் சொல்ல நினைத்ததை மொழிபெயர்த்தே பேசிக்கொண்டாலும், இருவருக்கும் பொதுவாக இருந்த நகைச்சுவை உணர்வு இருவரையும் இன்னும் நெருக்கமாக்கியிருக்கிறது. இந்நிலையில் இருவரும் முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடிவெடித்தனர்.