ஜிம்பாப்வே அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற நெதர்லாந்து

ஆசிரியர் - Editor II
ஜிம்பாப்வே அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற நெதர்லாந்து

நடைபெற்றுவரும் ரி-20 உலகக் கோப்பை தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து அணி  5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயசுழல்ச்சினில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே, துடுப்பாட்டத்தை தெரிவு செய்யது. 19.2 ஓவர்களில் 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 117 ஓட்டங்களை ஜிம்பாப்வே பெற்றது. 

இதன் படி 118 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து விளையாடியது. அந்த அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஸ்டீபன், 8 ஓட்டங்கள் பெற்ற நிலையில் அட்டமிழந்தார். 

ஆனாலும் இரண்டாவது விக்கெட்டிற்கு 73 ஓட்டங்களை மேக்ஸ் மற்றும் டாம் கூப்பர் பகிர்ந்து கொண்டனர். இருப்பினும் 32 ஓட்டத்துடன் கூப்பர் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அரை சதம் விளாசி மேக்ஸ் ஆட்டமிழந்தார். அப்போது அந்த அணியின் வெற்றிக்கு 9 ஓட்டங்கள் தான் தேவைப்பட்டன.

ஆனாலும் களத்தில் நின்ற துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களை எடுக்கத் தடுமாறினர். அதனால் எளிதில் வெல்ல வேண்டிய போட்டியை கொஞ்சம் போராடி, வெற்றியை தாமதமாகப் பெற்றது நெதர்லாந்து. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு