8 ஆண்கள் மூலம் 11 குழந்தைகள் பெற்ற பெண்!! -மேலும் பல குழந்தைகள் பெற்று கொள்ள விருப்பம் எனவும் விளக்கம்-
அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பெண்ணிற்கு 8 ஆண்கள் மூலம் 11 குழந்தைகள் பிறந்த நிலையில் தன் மீது எழுந்துள்ள விமர்சனங்களுக்கு வித்தியாசமான விளக்கத்தை கொடுத்துள்ளார்.
அந்நாட்டின் டென்னசி என் பகுதியைச் சேர்ந்த பிஹாய்க்கு மொத்தம் 11 குழந்தைகள் உள்ளனர் என்பது அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. இந்த குழந்தைகளுக்கு மொத்தம் 8 தந்தைகள் என்பது தான் விசித்திரரத்திலும் விசித்தரமாக உள்ளது.
இதனால் அவரை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பாக வினோதமான விளக்கத்தை அவர் கொடுத்துள்ளார். இது குறித்து பிஹாய் கூறுகையில்:-
8 ஆண்கள் மூலம் 11 குழந்தைகள் எனக்கு பிறந்ததற்காக நான் வெட்கப்படவில்லை, நான் ஏன் வெட்க படனும் இது எனக்கு நன்மை தான். எவ்வாறு என்றால் அதாவது உங்களிடம் ஒன்று இருந்தால், அந்த ஒன்றையும் எடுத்துக் கொண்டால், உங்களிடம் எதுவுமே இருக்காது. ஆனால் உங்களிடம் 8 இருந்தால் மற்றும் அதிலிருந்து மூன்றை எடுத்தால், உங்களிடம் இன்னும் 5 இருக்கும்.
அதாவது என் குழந்தைகளுக்கு ஒரு தந்தை மட்டும் இருந்தால் அவர் என்னை பிரிந்தாலோ அல்லது இறந்துவிட்டாலோ என் குழந்தைகள் தந்தையற்றவர்களாகி விடுவார்கள். ஆனால் இப்போது 8 பேரில் மூவர் இல்லையென்றாலும் 5 பேர் இருப்பார்கள் என கூறியுள்ளார். அவரின் இந்த விளக்கத்தையும் பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.