ருவிட்டரை வசப்படுத்திய எலான் மஸ்க்!! -பல அதிகாரிகளும் பணி நீக்கம்-
உலகின் முதல்தர பணக்காரரான எலான் மஸ்க், ருவிட்டர் நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் சுமார் 3.5 இலட்சம் கோடி ரூபாவிற்கு வாங்குவதாக அறிவித்திருந்தார். பின்னர் தன் முடிவில் இருந்து அவர் பின்வாங்கியதை அடுத்து, ஒப்பந்தத்தை தட்டிக்கழிப்பதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஓக்டோபர் 28 ஆம் திகதிக்குள் ஒப்பந்தத்தை இறுதி செய்ய கெடு விதித்தது. இந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை ஒப்பந்தம் முடிந்து ருவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளரானார் எலான் மஸ்க். இதனையடுத்து ஒப்பந்தம் முடிந்தவுடன் எலான் மஸ்க் ருவிட்டரின் உயர் அதிகாரிகளை அதிரடியாக பணிநீக்கம் செய்தார்.
ருவிட்டர் சி.இ.ஓ பராக் அகர்வால் மற்றும் தலைமை நிதி அதிகாரி நெட் செகல், ருவிட்டர் சட்ட மற்றும் கொள்கை நிர்வாகி விஜய காடே உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.