ஆனந்த சங்கரியின் பேரனே த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்..
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரியின் பேரனே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் எனத் தெரிவித்துள்ள ஊடகவியிலாளர் என்.வித்தியாதரன் சங்கரி சுமந்திரன் இருவருக்கும் இடையில் உறவு முறையில் தான் பிரச்சனை இருக்கின்றது.
அதனால் தான் இருவரும் கதைப்பதில்லை, அரசியல் ரீதியாக எந்த பிரச்சனையும் இல்லை என உண்மையை போட்டுடைத்துள்ளார்.
கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நேற்றைய தினம் சாவகச்சேரியில் நடைபெற்ற போது உரையாற்றுகையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாடளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஊடகங்கள் தொடர்பில் தொடர்ச்சியான விமர்சனங்களை முன்வைத்து கொண்டுள்ளார்.
ஊடகங்கள் பல சந்தர்ப்பங்களில் தவறுகள் இளைத்து வருவதாகவும் அவர் கூறி வருகின்றார். இதில் ஒரு முக்கிய விடயமாக 2005 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது புலிகள் நடுநிலை வகித்ததிருந்தார்கள்.
இது ஒரு தவறான விடயம் என ரணிலின் நண்பரான சுமந்திரன் கூறி வருகின்றதோடு, இதனை அப்போதைய ஊடகங்களும், அரசியல் வாதிகளும் சுட்டிக்காட்டவில்லை.
அப்போது ஏன் அந்த துணிவு வரவில்லை கூறியும் வருகின்றார். ஆனால் ரணில் இது தொடர்பில் புலிகளுடன் பேச போவதாக என்மூலமாக கூறியிருந்தார். எனினும் இறுதி நேரத்தில் அந்த பேச்சுக்களை நிறுத்தியிருந்தார்.
இதே போன்று இறுதியாக தேர்தல் நடைபெறுவதற்கு மூன்று தினங்களுக்கு முன்னரும் கூட, புலிகள் ஒரு நிபந்தனை ஒன்றை விதித்திருந்தார்கள்.
அதனை ரணில் ஏற்றுக்கொள்ளாது தனக்கு தெற்கில் ஆதரவு உள்ளதாகவும், வடக்கு கிழக்கு மக்களுடைய ஆதரவு இல்லாமல் தன்னால் வெற்றிபெற முடியும் எனவும் என எம்மிடம் கூறியிருந்தார்.
இந்த பின்னணியில் தான் ரணில் தேர்தலில் தோல்வியை தழுவியிருந்தார். இந்த நிலையில் ரணிலின் நண்பர் சுமந்திரன் கூறுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது. என வித்தியாதரன் கூறினார்.