பசியினால் ஆமணக்கு விதைகளை உட்கொண்டனரா மாணவர்கள்! உண்மை என்ன? அதிகாரிகள் மௌனம்..

ஆசிரியர் - Editor I
பசியினால் ஆமணக்கு விதைகளை உட்கொண்டனரா மாணவர்கள்! உண்மை என்ன? அதிகாரிகள் மௌனம்..

உணவுக்காக ஆமணக்கு விதைகளை உட்கொண்ட மாணவர்கள் தொடர்பான தகவல்களை வழங்க கிளிநொச்சி வைத்தியசாலை நிர்வாகம் மறுத்துவருகின்றது. 

பாடசாலை ஒன்றில் காலை உணவு கிடைக்காததால் பாடசாலையில் ஆமணக்கு விதையை மாணவர்கள் சிலர் உட்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் சுகயீனமடைந்த மாணவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மாவட்டத்தில் உள்ள பின் தங்கிய பிரதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் ஆரம்ப பிரிவு மாணவர்கள் காலை உணவுக்காக தேக்கம் காய் என நினைத்து ஆமணக்கு விதையை உட்கொண்டதாக கூறப்படுகின்றது. 

இதனால் மூன்று மாணவர்கள் வாந்தி எடுத்த நிலையில் வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டி மூலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்களை அம்புலன்ஸ் வண்டியில் எடுத்துச் செல்லும்போது பாடசாலையின் கழுத்துப்பட்டிகள் கழட்டப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அறிவருகிறது.

ஆனால் வைத்தியசாலையில் மாணவர்கள் ஒவ்வாமை காரணமாக  அனுமதிக்கப்பட்டதாக பதிவேட்டில் பதியப்பட்டுள்ளதாக வைத்தியசாலை உள் வட்டாரங்கள் மூலம் அறிய கிடைத்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தி அத்தியட்சகர் சுகந்தனை தொடர்பு கொண்டு கேட்டபோது 

குறித்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும் அதிகாரம் தமக்கு வழங்கப்படவில்லை என தெரிவித்தார்.

அண்மையில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் 

பட்டினியை எதிர்நோக்கி உள்ளதாக தகவல் வெளியிட்ட மை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு