யாழ்.பலாலி - வள்ளுவர்புரம் பகுதியில் சிறுமியின் சங்கிலியை அறுத்த தமிழ் இராணுவ சிப்பாயை மடக்கிப் பிடித்து கவனித்த பொதுமக்கள்! இராணுவத்தினர் இடையூறு..

ஆசிரியர் - Editor I
யாழ்.பலாலி - வள்ளுவர்புரம் பகுதியில் சிறுமியின் சங்கிலியை அறுத்த தமிழ் இராணுவ சிப்பாயை மடக்கிப் பிடித்து கவனித்த பொதுமக்கள்! இராணுவத்தினர் இடையூறு..

யாழ்.பலாலி - வள்ளுவர்புரம் கிராமத்தில் வீதியால் சென்ற சிறுமி ஒருவருடைய சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடிய தமிழ் இராணுவ சிப்பாய் பொதுமக்களால் துரத்திப் பிடிக்கப்பட்டு நொருக்கப்பட்டுள்ளார். 

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றது. 15 வயதுச் சிறுமி தனியார் கல்வி நிலையத்துக்கு சென்றுவிட்டு வீடுதிரும்ப வீதியில் நடந்து சென்றுள்ளார். மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்தவர் சங்கிலியை அபகரித்துவிட்டு சிறுமியை கீழே தள்ளிவிட்டுத் தப்பித்துள்ளார். 

சிறுமி காயத்துக்குள்ளாகிய நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் ஊரவர்கள் ஒன்றிணைந்து வழிப்பறி கொள்ளையனை மடக்கிப்பிடித்தனர். 

இலங்கை இராணுவத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணியாற்றும் கொல்லங்கலட்டியை சேர்ந்தவரே இவ்வாறு மக்களினால் மடக்கிப்பிடிக்கப்பட்டு பலாலி பொலிஸ் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். 

அவரிடம் சங்கிலியும் கைப்பற்றப்பட்டது. சந்தேக நபரை பொலிஸார் அழைத்துச் சென்ற போது இராணுவத்தினர் தலையீடு செய்ததால் குழப்பநிலை ஏற்பட்டது. எனினும் மக்களின் எதிர்ப்பால் இராணுவத்தினரின் இடையூடு கைவிடப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு