SuperTopAds

நாயுடன் பாலியல் உறவுவில் ஈடுபட்ட நபர்!! -நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு-

ஆசிரியர் - Editor II
நாயுடன் பாலியல் உறவுவில் ஈடுபட்ட நபர்!! -நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு-

நாயுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட குற்றத்தை ஒப்புக்கொண்ட நபரொருவருக்கு நீதிமன்றமொன்று 12 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது.

அமெரிக்கவின் மேரிலண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 44 வயதான ஜேசன் போல் ஹெவ்லட் என்பவருக்கு இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மிருகங்களை பாலியல் துஷ்பிரயோகப்படுத்தும் குற்றச்செயல்கள் இடம்பெற்றிருக்கக்கூடிய சாத்தியங்கள் குறித்து கடந்த வருடம் நவம்பர் மாதம் பொலிஸாருக்கு மிருகக் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகளால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட ஆரம்பித்து, ஜேசன் போல் ஹெவ்லெட்டின் தொலைபேசியை ஆராய்ந்தனர். இதன்போது, நாயுடன் பாலியல் உறவுகொள்வது தொடர்பாக அவர் நடத்திய உரையாடல்கள், அவர் நாயுடன் பாலியல் உறவு கொண்டபோது எடுக்கப்பட்ட படங்கள், வீடியோக்களை பொலிஸார் கண்டுபிடித்தனர். 

மேலும், அந்த படங்கள், வீடியோக்களை சந்தேக நபர் சிலருக்கு அனுப்பியமையும் தெரியவந்துள்ளது. அத்துடன் அவரது வீட்டில் பல துப்பாகிகளும் கண்டுபிடிக்கப்பட்டன. 

ஏற்கெனவே ஒரு வழக்கில் அவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டதால், அவர் துப்பாக்கிகளை  வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

நாயுடன் பாலியல் உறவு கொண்டமை தொடர்பான குற்றச்சாட்டுகளை, ஜேசன் போல் ஹெவ்லெட் ஒப்புக்கொண்டார். அதையடுத்து நீதிமன்றம் அவருக்கு 12 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில் சிறையிலிருந்து விடுதலையான பின்னர், அவர் மனநல சோதனைகளுக்கும் சிகிச்சைகளுக்கும் உட்பட வேண்டும், மிருகங்களை தன்னுடன் வைத்திருக்கக்கூடாது என்பது போன்ற நிபந்தனைகளையும் நீதிமன்றம் விதித்துள்ளது.