யாழ்.வல்வெட்டித்துறை - உடுப்பிட்டி பகுதிகளில் பகல் வேளைகளில் வீடு உடைத்து தொடர் கொள்ளை! நகை மற்றும் உருக்கிய தங்கத்துடன் இருவர் சிக்கினர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.வல்வெட்டித்துறை - உடுப்பிட்டி பகுதிகளில் பகல் வேளைகளில் வீடு உடைத்து தொடர் கொள்ளை! நகை மற்றும் உருக்கிய தங்கத்துடன் இருவர் சிக்கினர்..

யாழ்.வல்வெட்டித்துறையில் தொடர்ச்சியாக பல வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேகநபரிடமிருந்து சுமார் 11 லட்சம் ரூபாய் பெறுமதியான நகை மற்றும் உருக்கப்பட்ட தங்கம் ஆகியன மீட்கப்பட்டுள்ளது. 

கம்பர்மலையைச் சேர்ந்த 25 வயதுடைய முதன்மை சந்தேக நபர் ஒருவரும் அவருக்கு உடுப்பிட்டியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

பூட்டியிருக்கும் வீடுகளில் பகல் வேளைகளில் உடைத்து நகைகள் திருடப்பட்டதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அவை தொடர்பில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

பருத்தித்துறை நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் திருடப்பட்ட நகைகள் உருக்கிய நிலையில கைப்பற்றப்பட்டதுடன் நகைக்கடை உரிமையாளர் வழங்கிய தகவலின் அடிப்படையில் முதன்மை சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் திருட்டு நகைகளை வங்கியில் அடகு வைத்து உடந்தையாக இருந்த மற்றொருவரும் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர்கள் விசாரணைகளின் பின் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு