பிரான்சில் எரிபொருளுக்கான அலைமோதும் மக்கள் கூட்டம்!! -நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாகனங்கள்-
பிரான்ஸ் நாட்டில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டதால், நாட்டின் முக்கிய நகரங்களில் எரிபொருளுக்காக வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளின் ஊழியர்கள் நடத்திவரும் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக டோட்டல் எனர்ஜிஸ், எக்ஸான்மொபில் நிறுவன ஊழியர்கள், ஊதியம் வழங்கல் தொடர்பாக கடந்த 2 வாரங்களாக வேலைநிறுத்தத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாழ்க்கைச் செலவு நெருக்கடி அதிகரித்துள்ளதால் ஊதியத்தை அதிகரித்து வழங்குமாறு ஊழியர் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் உற்பத்தி 60 சதவீதத்துக்கும் அதிகம் சரிவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது, டோட்டல் எனர்ஜிஸ் நிறுவனத்தின் மூன்று சுத்திகரிப்பு நிலையங்களில் உற்பத்தி முடக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பிரான்சில் பெரும்பாலான நிலையங்களில் பெட்ரோல் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.