SuperTopAds

நேபாள ஜனாதிபதிக்கு கொரோனா!! -வைத்தியசாலையில் அனுமதி-

ஆசிரியர் - Editor II
நேபாள ஜனாதிபதிக்கு கொரோனா!! -வைத்தியசாலையில் அனுமதி-

நேபாள ஜனாதிபதி கொரோனா தடுப்பூசிகளை முழுமையாக போட்டுக் கொண்டுள்ள போதும் அவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்நாட்டின் ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி (வயது 61) திடீர் உடல் நலக் குறைவால் 2 நாட்களுக்கு முன்பு காத்மண்டுவில் உள்ள திரிபுவன் பல்கலைக்கழக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

அவருக்கு காய்ச்சல், இருமல், உடல்வலி இருந்த நிலையில் மருத்துவர்கள் கொரோனா பரிசோதனை செய்தனர். இதில் பித்யா தேவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் கொரோனா தடுப்பூசிகளை முழுமையாக போட்டுள்ளதால் கவலையளிக்கும் வகையிலான பிரச்சினைகள் ஏற்படாது என மருத்துவர்கள் நம்பிக்கையும் தெரிவித்து உள்ளனர். எனினும் இன்னும் சில நாட்களுக்கு அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.