148 வது உலக அஞ்சல் தினத்தையொட்டி யாழ்.பிரதான அஞ்சலகத்தால் நடத்தப்பட்ட இரத்ததான முகாம்..

ஆசிரியர் - Editor I
148 வது உலக அஞ்சல் தினத்தையொட்டி யாழ்.பிரதான அஞ்சலகத்தால் நடத்தப்பட்ட இரத்ததான முகாம்..

148வது உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு யாழ் பிரதான அஞ்சலகத்தால் வருடா வருடம் முன்னெடுக்கப்படும் இரத்ததான முகாம் இன்று காலை 9 மணியளவில் யாழ்.மாவட்ட பிரதான அஞ்சலுவலகத்தில் முன்னெடுக்கப்பட்டது.

இதன் பொழுது அதிகளவான அஞ்சலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் தன்னார்வரீதியாக இரத்ததான முகாமில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் வடமாகாண பிரதி அஞ்லதிபதி நாயகம் திருமதி மதுமதி வசந்தகுமார், 

யாழ்ப்பாணம் பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் அனுராத பெர்ணாண்டோ, யாழ்.பிரதம அஞ்சலதிபர் இ.மணிவண்ணன், தபாலதிபர்கள், வடமாகாண சுங்க திணைக்கள அதிகாரிகள், அஞ்சலக உத்தியோகத்தர்கள்,

ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மக்கள் வரிப்பணத்தில் மணைவிக்கு சேலை வாங்கும் வடக்கு அதிகாரி ..

மேலும் சங்கதிக்கு