யாழ்.தெல்லிப்பழையில் மின்னல் தாக்கி உயிரிழந்த இளைஞனுக்கு இழப்பீடு!

ஆசிரியர் - Editor I
யாழ்.தெல்லிப்பழையில் மின்னல் தாக்கி உயிரிழந்த இளைஞனுக்கு இழப்பீடு!

யாழ்.தெல்லிப்பழையில் மின்னல் தாக்கி உயிரிழந்த இளைஞருக்கு அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் சூரியராஜ் கூறியுள்ளார். 

மின்னல் தாக்கத்தினால் உயிரிழந்தவருக்கு அரசினால் வழங்கப்படும் அனர்த்த இழப்பீட்டு நிதியினை பெற்று கொடுப்பதற்குரிய அனைத்து விபரங்களும் தெல்லிப்பழை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஊடாக சேகரிக்கப்பட்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

உயிரிழந்தவரின் இறப்பு சான்றிதழ் கிடைக்கப்பெற்றதுடன் அரசினால் வழங்கப்படும் இரண்ரரை லட்சம் ரூபா இழப்பீட்டு நிதியினை உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு விரைவில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்,

யாழ்.தெல்லிப்பளை கிழக்கை சேர்ந்த மகாலிங்கம் இராகவன் (வயது 34) எனும் இளைஞனே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் அம்பனை பகுதியில் உள்ள தமது தோட்டத்தில் வேலையில் ஈடுபட்டிருந்த தந்தைக்கு உணவினை கொண்டு சென்ற வேளை தோட்ட பகுதியில் மின்னல் தாக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்.தெல்லிப்பளை காங்கேசன்துறை பகுதிகளில் நேற்றைய தினம் வியாழக்கிழமை காலை திடீரென கடும் மழை இடி மின்னலுடன் பெய்திருந்தது. அவ்வேளையிலையே மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு