யாழ்.மண்டைதீவு சுற்றுலா மையம் கேட்பாரற்று கிடக்கிறது! 8 கோடி ரூபாய் பணத்தை கடலில் கொட்டிய அதிகாரிகள்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மண்டைதீவு சுற்றுலா மையம் கேட்பாரற்று கிடக்கிறது! 8 கோடி ரூபாய் பணத்தை கடலில் கொட்டிய அதிகாரிகள்..

யாழ்.மண்டைதீவில் ஆரம்பிக்கப்பட்ட சுற்றுலா மையத்தின் செயற்பாடுகள் முடங்கியுள்ள நிலையில் குறித்த செயற்றிட்டம் தொடர்பாக யாழ்.மாவட்டச் செயலக திட்டமிடல் பகுதிக்கு வழங்கப்பட்ட தகவல் அறியும் உரிமைச்சட்டம் ஊடான கேள்விகளுக்கு 3 மாதங்கள் கடந்தும் குறித்த பிரிவு பதிலளிக்கவில்லை. 

கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் அமைச்சு ஒன்றினால் சுமார் 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் யாழ்.மாவட்ட செயலகத்தால் மண்டதீவு சுற்றுலா மையத்தின் வேலை திட்டத்துக்காக நிதி விடுவிப்புச் செய்யப்பட்டது.

குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வேலனை பிரதேச செயலகம் மற்றும் வேலனை பிரதேசசபை இணைந்து மண்டைதீவு சுற்றுலா மையத்தின் அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்த நிலையில் குறித்த திட்டம் இதுவரை மக்களுக்கு பயன் அளிக்கவில்லை.

திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்ட கடற்பிரதேசம் ஆழம் குறைந்த கடற்பகுதியாக காணப்படும் நிலையில் படகுச் சவாரிகளை மேற்கொள்ள அதிகாரிகள் குறித்த கடல் பிரதேசத்தை எவ்வாறு தெரிவு செய்தார்கள்?

சாட்டி மற்றும் காரைநகர் கடற்கரைகள் சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து செல்லும் பகுதியாக காணப்படும் நிலையில் ஏன் குறித்த திட்டத்தை மண்டதீவில் செயற்படுத்தினார்கள்.

மக்களின் வரிப்பணத்தில் அமைச்சினால் ஒதுக்கப்பட்ட சுமார் 8 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக கூறப்படும் மண்டதீவு சுற்றுலா மையத்தில் தற்போது ஒளிராதா மின்குமிழ்கள் மட்டும் எஞ்சியுள்ளது.

இவ்வாறு பல குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்படும் மண்டதீவு சுற்றுலா மையத்திற்கு ஒதுக்கப்பட்ட பல கோடி ரூபாய் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக அறிய வரும் நிலையில் யாழ்.மாவட்ட செயலாக திட்டமிடல் பிரிவுக்கு 

கடந்த 6ஆம் மாதம் தகவல் அறியும் சட்டமூலத்தில் குறித்த சுற்றுலா மையம் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டது. இவ்வாறான நிலையில் மூன்று மாதங்கள் கடந்தும் யாழ்.மாவட்ட செயலக திட்டமிடல் பிரிவால் 

குறித்த திட்டம் தொடர்பாக கோரிக்கையாளருக்கு பதில் வழங்க முடியாத நிலையே உள்ளது. குறித்த திட்டத்திற்கான நிதி விடுவிப்பை யாழ்.மாவட்ட செயலகத் திட்டமிடல் பிரிவே மேற்கொண்ட நிலையில் 

குறித்த திட்ட முறைகேடுகளுடன் அதிகாரிகள் தொடர்புபட்டுள்ளார்களா? என்ற சந்தேகம் எழுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு