கடலட்டை பண்ணைகளால் பெண் தலைமைத்துவ குடும்பங்களில் வாழ்வாதாரம் அழிப்பு! உணவு தவிர்ப்பு போராட்டத்தில் குதித்த மக்கள்.
பூநகரி - கிராஞ்சி இலவன்குடா கடற்பகுதியில் பாரம்பரியமாக சிறகுவலை தொழில் செய்துவரும் பகுதியில் கடலட்டை பண்ணை அமைக்கப்படுவதை கண்டித்து பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
நேற்றய தினம் தொடக்கம் இந்த உணவுத் தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேற்படி இலவன்குடா கடற்பரப்பில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் இறால், நண்டு, மீன் போன்றவற்றை பிடிப்பது அன்றாடா வாழ்வாதார தொழிலாக பல ஆண்டுகளாக இருந்துவருகின்றது.
அதனை சீர்குலைத்து தங்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையிலேயே இந்த கடலட்டை பண்ணை அமைக்கும் முயற்சிகள் அமைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர்.