முல்லைத்தீவு மீனவர்கள் முற்றாக வெளியேற்றம் ! மயான அமைதியில் கடற்கரைப் பிரதேசம் !!

முல்லைத்தீவு கடற்கரை வாடிகளில் குடியிருந்த மீனவர்கள் அங்கிருந்து முற்றாக வெளியேறியுள்ளனர்.
இலங்கையில் ஏற்படவுள்ள காலநிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கைகளை தொடர்ந்து மீனவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக கூறப்படுகின்றது.
கடல்மட்டம் உயர்வடைந்துள்ளதால், அனர்த்தம் ஏற்படும் என்ற அச்சம் காரணமாக மீனவர்கள் தமது மீன்பிடிப்படகுகளை கடற்கரையில் இருந்து சுமார் 100 மீற்றர் தூரம் மேல்ஏற்றி பாதுகாப்பாக கட்டிவைத்துள்ளனர்.
இந்த நிலையில் கடற்கரை பிரதேசம் எங்கும் ஆள் நடமாட்டமின்றி மயான அமைதி நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.