SuperTopAds

யாழ்.மந்திகை வைத்தியசாலை பொறுப்பதிகாரி வல்வெட்டித்துறைக்கு இடமாற்றம்! முயற்சிகள் அனைத்தும் தோல்வியாம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மந்திகை வைத்தியசாலை பொறுப்பதிகாரி வல்வெட்டித்துறைக்கு இடமாற்றம்! முயற்சிகள் அனைத்தும் தோல்வியாம்..

மந்திகை ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பொறுப்பு வைத்தியர் கமலநாதன் வல்வெட்டித்துறை வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றார்.

சம்பவம் தொடர்புக்கு தெரிய வருவதாவது, மந்திகை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற முறைகேடுகளால் பணி இடமாற்றம் பெற்ற வைத்தியர் கமலநாதன் தனது இட மாற்றத்தை நிறுத்துவதற்காக சுகயீன விடுமுறையில் பெற்றதுடன், 

இடமாற்றத்தை இரத்துச் செய்வதற்கான பல்வேறு முயற்சிகளை எடுத்ததாக தகவல்கள் கசிந்துள்ளதுடன், இரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் ஒருவருடனும் இடமாற்றத்தை இரத்து செய்வது குறித்து பேசப்பட்டுள்ளது. 

எனினும் மாந்திகை வைத்தியசாலையில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் வடமாகாண பிரதம உள்ளக கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டதுடன், ஊடகங்களிலும் செய்திகள் வெளியான நிலையில் அவர்களும் கைகழுவியுள்ளனர். 

இந்நிலையில் வேறு வழியின்றி வடமாகாண சுகாதார பணிப்பாளர் பணிமனையில் தனது இடமாற்றத்த கடிதத்தை பெற்ற மந்திகை வைத்தியசாலை பொறுப்பதிகாரி வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் கடமைகளை பொறுப்பேற்றார்.

இதேவேளை குறித்த பொறுப்பு வைத்தியர், முன்னாள் மாகாண சுகாதார பணிப்பாளரை காப்பாற்ற முயற்சித்தே இறுதியில் தனக்கு இடமாற்றத்தை தேடிக் கொண்டதாக வைத்திய வட்டாரங்கள் தொிவிக்கின்றன.