யாழ்.காரைநகரில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிக்க காரணம் இவர்களே! பிரதேசசபை தவிசாளர் குற்றச்சாட்டு..
யாழ்.காரைநரில் அண்மைய நாட்களில் இடம்பெறும் அதிக திருட்டு சம்பங்களுக்கு காரணம் வெளியிடங்களில் இருந்து வியாபார நோக்கத்தில் காரைநகருக்குள் வருபவர்களாலேயே என காரைநகர் பிரதேசசபை தவிசாளர் க.பாலச்சந்திரன் கூறியிருக்கின்றார்.
இந்நிலையில் காரைநகர் பிரதேசத்தில் இருந்து வெளியே செல்லும் சந்தேகத்துக்கிடமான வாகனங்கள் பிரதேச செயலரின் ஒத்துழைப்புடன் கடற்படையினரால் பரிசோதனை செய்யப்படுகிறது.
காரைநகர் பிரதேசத்தில் அண்மைய நாட்களில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றது. இவ்வாறான திருட்டு சம்பவங்கள் வெளியிடங்களில் இருந்து வர்த்தக நடவடிக்கைகளுக்காக காரைநகர் பிரதேசத்திற்குள் வருவோரால் முன்னெடுக்கப்படுவதாக அறிய முடிகின்றது.
அதாவது பழைய இரும்பு பழைய பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிக்க வருவோரால் இவ்வாறான திருட்டு சம்பவங்கள் முன்னெடுக்கப்பட கூடும் எனவே இதனை தடுக்கும் முகமாக காரைநகர் பிரதேசத்துக்குள் வியாபார நடவடிக்கைகளுக்கு வருவோர்
காரைநகர் பிரதேச சபையினரிடம் உரிய அனுமதியை பெற்று அதற்குரிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்த பின்னரே வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்ற நடைமுறை விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.