குருந்துார் எங்கள் சொத்து - ரவிகரன், மயூரனை விடுதலை செய்..! யாழ்.பல்கலைகழக மாணவர்கள் போராட்டம்..

ஆசிரியர் - Editor I
குருந்துார் எங்கள் சொத்து - ரவிகரன், மயூரனை விடுதலை செய்..! யாழ்.பல்கலைகழக மாணவர்கள் போராட்டம்..

தமிழர்களின் பூர்வீக நிலமான முல்லைத்தீவு குருந்தூர் மலைப் பகுதியில் இடம்பெறும் திட்டமிட்ட பொளத்த சிங்கள மயமாக்கலை கண்டித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திட்டமிட்ட சிங்கள பௌத்தமயமாக்களை கண்டித்து கோஷங்களை எழுப்பியவுடன் குருந்தூர் மலை தமிழர்களின் சொத்து, தொல்பொருள் திணைக்களமே தொல்லை கொடுக்காதே, 

கைது செய்யப்பட்ட ரவிகரன் மற்றும் மயூரனை உடனடியாக விடுதலை செய், போன்ற வாசகங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்மானது யாழ் பல்கலைக்கழக முன்றில் ஆரம்பிக்கப்பட்டு 

பரமேஸ்வரா சந்தி வரை பேரணியாக சென்றமை குறிப்பிடத்தக்கது.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு