வவுனியா மாவட்டத்தின் பெயரை “வவுனியாவ” என திரித்து வர்த்தமானி..! உடனடியாக திருத்துமாறு அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கடிதம்..

ஆசிரியர் - Editor I
வவுனியா மாவட்டத்தின் பெயரை “வவுனியாவ” என திரித்து வர்த்தமானி..! உடனடியாக திருத்துமாறு அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கடிதம்..

வவுனியா மாவட்டத்தின் பெயரை “வவுனியாவ” என எழுத்தில் குறிப்பிட்டு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டமை தொடர்பில் வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். 

வவுனியா நகரசபையை மாநகர சபையாக தரம் உயர்த்த 2022-09-06 ஆம் திகதிய 2296/05 இலக்க வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

இதன் ஆங்கில வடிவத்தில் தற்போதைய வவுனியா நகர சபையை வவுனியா மாநகர சபையாக தரம் உயர்த்தப்படுகின்றது என்பதற்கு பதிலாக “வவுனியாவ” நகர சபையை “வவுனியாவ” மாநகர சபையாக தரம் உயர்த்தப்படுகின்றது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரலாற்றுரீதியாக வவுனியா என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் அதனை மாற்றுவது தவறு மட்டுமல்லாமல் வரலாற்று பிறழ்வுமாகும். என சுட்டிக்காட்டியுள்ள சீ.வி.கே.சிவஞானம், 

உடனடியாக திருத்தியமைக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். என மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

இரு வருடங்களாக தீயணைப்பு வாகனத்தை திருத்த முடியாத யாழ்.மாநகர நிர்வாகம்..

மேலும் சங்கதிக்கு