போதைக்கு அடிமையான மாணவனை மறுவாழ்வு நிலையத்தில் சேர்த்த ஆசிரியைக்கு இடமாற்றம்! பாடசாலை பெயர் கெட்டுவிட்டதாம், யாழ்.பண்டத்தரிப்பில் சம்பவம்..
யாழ்.பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் போதைப் பொருளுக்கு அடிமையான மாணவனை சாவகச்சோியில் உள்ள மறுவாழ்வு நிலையத்தில் சேர்த்தமைக்காக ஆசிரியை ஒருவரை குறித்த பாடசாலை அதிபர் இடமாற்றம் செய்துள்ளதாக சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் கூறியுள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற போதைப் பொருள் கட்டுப்பாடு தொடர்பான கலந்துரையாடலின்போதே அவர் இதனை குறிப்பிட்டிருக்கின்றார். இதன்போது மேலும் அவர் குறிப்பிட்டதாவது,
யாழ்.பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள பாடசாலையில் கல்வி கற்றும் மாணவன் ஒருவன் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகியிருந்த நிலையில் ஆசிரியை ஒருவர் அவனை சாவகச்சோியில் உள்ள மறுவாழ்வு நிலையத்தில் அனுமதித்துள்ளார். இதனால் தமது பாடசாலை பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக கூறிய அதிபர்,
மேற்படி ஆசிரியையை இடமாற்றம் செய்துள்ளார். இது தொடர்பாக குறித்த ஆசிரியை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு வழங்கியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.