வைத்தியரின் சகோதரனுக்கு கட்டட ஒப்பந்தம்! புதிய வைத்திய அத்தியட்சகர் பதவியேற்பதை தடுக்க காரணம் இதுதானா?

ஆசிரியர் - Editor I
வைத்தியரின் சகோதரனுக்கு கட்டட ஒப்பந்தம்! புதிய வைத்திய அத்தியட்சகர் பதவியேற்பதை தடுக்க காரணம் இதுதானா?

யாழ்.பருத்தித்துறை - மந்திகை வைத்தியசாலையில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடம் ஒன்றுக்கான ஒப்பந்தம்  குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரின் சகோதரருக்கு வழங்கியதை மறைப்பதற்கே புதிய அத்தியட்சகர் நியமனத்திற்கு முட்டுக்கட்டை போடப்பட்டு வருகின்றது. 

குறித்த வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய வைத்தியர் கமலநாதன் காலத்தில் குறித்த வைத்தியசாலையின் கட்டட ஒப்பந்தங்கள் திறந்த விலை மனுக் கூறல் என்று வழங்கப்பட்டமை மாகாண கணக்காய்வு திணைக்கள விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த ஒப்பந்தங்கள் யாவும் தற்போது குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் முக்கியஸ்த்தர் ஒருவருடைய சகோதரனுக்கே வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இரு வருடங்களாக தீயணைப்பு வாகனத்தை திருத்த முடியாத யாழ்.மாநகர நிர்வாகம்..

மேலும் சங்கதிக்கு