யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம் - மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்து! குடும்பஸ்த்தர் பலி..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம் - மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்து! குடும்பஸ்த்தர் பலி..

யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஹயஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டத்தில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் இன்று காலை புளியங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும்,

சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 49 வயதுடைய பஞ்சநாதன் குகேந்திரன் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு