ஆலய திருவிழாவில் வாள்வெட்டு அடிதடி..! இரு பெண்கள் உட்பட 9 பேர் கைது, 4 பேர் வைத்தியசாலையில்..

ஆசிரியர் - Editor I
ஆலய திருவிழாவில் வாள்வெட்டு அடிதடி..! இரு பெண்கள் உட்பட 9 பேர் கைது, 4 பேர் வைத்தியசாலையில்..

கோவில் திருவிழாவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இரு பெண்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

நெளுக்குளம் - பொன்னாவரசன்குளம் ஆலய வருடாந்த திருவிழாவின் இறுதி நாளில் ஆலய வளாகத்தில் வாள்வெட்டு மற்றும் மோதல் சம்பவம் இடம்பெற்றிருந்தது. 

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், இரு பெண்கள் உட்பட 9 பேரை கைது செய்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை தொடரும் பொலிஸார் கைதான சந்தேகநபர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். 

இரு வருடங்களாக தீயணைப்பு வாகனத்தை திருத்த முடியாத யாழ்.மாநகர நிர்வாகம்..

மேலும் சங்கதிக்கு