மகா ராணிக்காக 96 முறை ஒலித்த மணி!!
பிரித்தானிய ராணி 2 ஆம் எலிசபெத்தின் மறைவை அடுத்து, அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூஸ் கதீட்ரல் தேவாலயத்தில், ராணி எலிசபெத் வாழ்ந்த வருடங்களை குறிக்கும் வகையில் 96 முறை மணிகள் ஒலித்தன.
70 ஆண்டுகளுக்கும் மேலாக பிரித்தானிய நாட்டின் அரசியாக இருந்த ராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால், 96 ஆவது வயதில் பால்மோரல் அரண்மனையில் நேற்று வெள்ளிக்கிழமை காலமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.