யாழ்.மாநகரசபைக்கு ஜப்பான் அரசாங்கம் கழிவகற்றல் வாகனம் வழங்கும் விவகாரம்! ஆளுநரிடம் ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்கும் படலம் ஆரம்பம்..
யாழ்.மாநகர சபைக்கு ஜப்பான் அரசாங்கத்தினால் யாழ்.மாநகரசபைக்கு இலவசமாக வழங்கப்படவிருந்த கழிவகற்றும் வாகனங்களை இலங்கைக்க இறக்குமதி செய்ய ஜப்பான் அரசாங்கம் யாழ்.மாநகரசபைக்கு வழங்கிய இறக்குமதி வரிப் பணத்தை மீள கோரிய விவகாரத்தில்,
வடமாகாண ஆளுநரிடம் ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்கும் அல்லது குற்றம் சுமத்தும் படலம் தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த வாகனங்களுக்கான இறக்குமதி வரி பணத்தை ஜப்பான் தூதரகம் கேட்காமலே யாழ்.மாநகர ஆணையாளர் ஜெயசீலன் கடிதம் மூலம் நிதியை திரும்ப பெறுமாறு கோரியமை தொடர்பில் வடமாகாண ஆளுநருக்கு மாநகர சபை உறுப்பினர் ஒருவர் எழுத்து மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.
அவர் தனது கடிதத்தில் குறிப்பிடப்படும்போது மாநகர சபை உறுப்பினர்களுக்கு தெரியாமலே சபையின் தீர்மானம் இன்றி கழிவகற்றும் வாகனங்களுக்கான இறக்குமதி நிதியினை திரும்பப்பெறுமாறு ஜப்பான் தூதரகத்துக்கு யாழ்.மாநகர ஆணையாளர் கடிதம் அனுப்பியமை சபை உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறுவதோடு
மாநகரக் கட்டளை சட்டங்களையும் மீறுவதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டார். இவ்வாறான நிலையில் ஆணையாளரும் தனது பங்கிற்கு மாநகர முதல்வர் இருக்கும்போது தான் நினைத்தபடி துதரகத்திற்கு கடிதம் அனுப்ப முடியாது என விடையங்களைக் குறிப்பிட்டு
தனது பங்கிற்கு ஆளுநருக்கு கடிதத்தை அனுப்பி உள்ளதாக அறிய முடிகிறது. இது எவ்வாறு இருந்தாலும் வடமாகாண ஆளுநர் வெளிநாட்டில் உள்ள நிலையில் காட்டிக்கொடுக்கும் படலம் ஆரம்பித்துள்ளது.