திண்மக் கழிவகற்றல் நிபுணர் ஒருவரை யாழ்.மாநகரசபைக்கு அனுப்பவுள்ள ரொறன்டோ மாநகர முதல்வர்! யாழ்.மாநகர முதல்வருடனான சந்திப்பில் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
திண்மக் கழிவகற்றல் நிபுணர் ஒருவரை யாழ்.மாநகரசபைக்கு அனுப்பவுள்ள ரொறன்டோ மாநகர முதல்வர்! யாழ்.மாநகர முதல்வருடனான சந்திப்பில் அறிவிப்பு..

யாழ்.மாநகர சபை திணமக் கழிவகற்றல் முகாமைத்துவத்தில் வினைத்தறனாக செயற்படுவதற்கான வழிகாட்டல்கள் மற்றும் பயிற்சிகளை வழங்குவதற்காக கனடா - ரொறன்டோ மாநகரின் துறைசார் நிபுணர் ஒருவரை யாழ்.மாநகரசபைக்கு அனுப்ப ரொறன்டோ மாநகர முதல்வர் ஜோன்ரொரி யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனுக்கு உத்தரவாதம் வழங்கியுள்ளார்.

கனடா ரொறோன்டோ மாநகர முதல்வர் ஜோன் ரொரிக்கும் யாழ்.மாநகர சபை முதல்வர்  வி.மணிவண்ணனுக்குமிடையிலான சந்திப்பு நேற்று வியாழக்கிழமை ரோறோன்டோவில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் யாழ்.மாநகர முதல்வர் மாநகர சபையின் திண்மக்கழிவற்றல் நடைமுறைகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் ரொறோன்டோ மாநகர முதல்வருக்கு தெரிவித்தார். 

அதன் அடிப்படையில் ரொறோன்டோ மாநகர சபையின் திண்மக்கழிவற்றல் முகாமைத்துவ நிபுணர் ஒருவரினை யாழ்ப்பாணத்திற்கு அனுப்புவதற்கும் அவர் மூலம் யாழ்.மாநகர சபையின் திண்மக்கழிவற்றல் தொடர்பான பயிற்சிகளையும் அனுபவ பகீர்வுகளையும் வழங்குவதற்கான இணக்கப்பாட்டினை ரொறோன்டோ மாநகர முதல்வர் ஜோன் ரொரி வழங்கினார். 

இதன்படி மிக விரைவில் ரொறோன்டோ மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் நிபுணர் ஒருவர் யாழ்.மாநகர சபைக்கு விஜயம் செய்து பயிற்சிகளை முன்னெடுப்பார் இந்த உதவிக்கு நன்றி தெரிவித்தார் யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன்.

ஓக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ரொறோன்டோ மாநகர முதல்வர் தேர்தலில் மீண்டும் ஜோன் ரொறி வெற்றி பெறவேண்டும் என்றும் அதற்கான வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

யாழ்.மாநகர முதல்வர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டபோது ரொறோன்டோ மாநகர முதல்வர் ஜோன் ரொரி அதற்கு கண்டனம் தொவித்ததுடன் உடன் விடுதலை செய்யப்படவேண்டும் என்றும் தெரிவித்திருந்தார் அதற்கும் மாநகர முதல்வர் மணிவண்ணன் நேரில் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

ரொறோன்டோ மாநகர முதல்வர் ஜோன் ரொரியுடனான சந்திப்பில் ரொறோன்டோ மாநகர சபை உறுப்பினர் ஜெனிவர் மக்கல்வியும் கலந்து கொண்டார்.

ரொறோன்டோ கனடா நாட்டின் மிகப்பெரிய நகரம் என்பதுடன் வட அமெரிக்காவிலுள்ள 5வது மிகப்பெரிய நகரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு