வைத்தியசாலையிலிருந்து காணாமல்போகும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள்! நடவடிக்கை எடுக்க தயங்கும் அதிகாரிகள்..

ஆசிரியர் - Editor I
வைத்தியசாலையிலிருந்து காணாமல்போகும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள்! நடவடிக்கை எடுக்க தயங்கும் அதிகாரிகள்..

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள சத்திர சிகிச்சை தொகுதியில் மருத்துவ உபகரணங்கள் தொடர்ச்சியாக திருடப்பட்டு வருகிறது. கடந்தவாரம் குறித்த வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை பிரிவிலிருந்து சில மருந்துப் பொருட்கள் காணாமல்போயிருந்தது. 

இது தொடர்பான விசாரணைகளின்போது பிரிவில் கடமையாற்றும் ஒருவர் பெட்டி ஒன்றை வெளியில் எடுத்துச் செல்லும் சி.சி.டி காணொளி கண்டுபிடிக்கப்பட்டது. இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது குறித்த பதவி நிலை உத்தியோத்தர் குருமன்காடு தனியார் வைத்தியசாலையிலும் கடமையாற்றுவது கண்டுபிடிக்கப்பட்டது. 

எனினும் குறித்த உத்தியோகஸ்த்தர் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவரை காப்பாற்றும் விதமான நடவடிக்கைகளையே அதிகாரிகள் மேற்கொண்டிருக்கின்ற நிலையில் 

திருட்டு சம்பவத்துடன் உயர் அதிகாரிகளுக்கும் அதில் தொடர்புள்ளதா? என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். குறித்த வைத்திய சாலையில் ஏற்கனவே சத்திர சிகிச்சை விடுதியில் இருந்து பொருட்கள் காணாமல்போவதாக பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் தொடர்ச்சியாக இவ்வாறு பொருட்கள் காணாமல் போவது குறித்த வைத்தியசாலை நிர்வாகத்தின் மீது சந்தேகம் கொள்ள வைத்துள்ளது.

குறித்த வைத்தியசாலையின் அத்தியட்சகர் இலக்கம் என கூறி வைத்தியசாலையின் பொது தொடர்பு பிரிவினரால் வழங்கப்பட்ட 0242222715 என்ற தொலைபேசிக்கு அழைப்பு எடுத்தபோதும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு