இலங்கை கடல் எல்லைக்குள் நுழையும் இந்திய இழுவை படகுகள் அரசுடமை ஆக்கப்பட்டு எமது மீனவர்களுக்கு வழங்கப்படும்! அமைச்சர் டக்ளஸ் எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
இலங்கை கடல் எல்லைக்குள் நுழையும் இந்திய இழுவை படகுகள் அரசுடமை ஆக்கப்பட்டு எமது மீனவர்களுக்கு வழங்கப்படும்! அமைச்சர் டக்ளஸ் எச்சரிக்கை..

இந்திய இழுவை படகுகளின் அத்துமீறல்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்நிலை தொடருமானால் கைது செய்யப்படும் இழுவை படகுகள் அரசுடமை ஆக்கப்பட்டு எமது மீனவர்களுக்கு வழங்கப்படும். 

மேற்கண்டவாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். இன்று நாடாளுமன்றில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

இந்தியக் கடற்றொழிலாளர்களின் இழுவை வலைப் படகுகளின் எல்லை தாண்டிய, தடைசெய்யப்பட்ட கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்துள்ளது. குறித்த சட்ட விரோதச் செயற்பாடுகள் தொடருமானால், 

2018ஆம் ஆண்டு சட்டத்தின் பிரகாரம் ஏற்கனவே அரசுடமையாக்கப்பட்டுள்ள இந்திய இழுவை வலைப் படகுகளை, அவற்றின் தொழில் முறைமையை மாற்றி எமது கடற்றொழிலாளர்களிற்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். 

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு