முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து தென்னிலங்கையில் இனவாதிகள் மோசமான விமர்சனங்களை முன்வைக்கின்றனர்..

ஆசிரியர் - Editor I
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து தென்னிலங்கையில் இனவாதிகள் மோசமான விமர்சனங்களை முன்வைக்கின்றனர்..

வடமாகாணசபை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளை தமிழ்தேசிய துக்க நாளாக அறிவித்தமையில் ஒரு தவறும் இல்லை. என கூறியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, வடமாகாணசபையின் தீர்மானம் உண்மையானது எனவும் கூறியுள்ளார். 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடமாகாணசபை நடாத்தியமை தொடர்பில் தென்னிலங்கையில் பலத்த விமர்சனங்கள் எழுந்துள்ளது. இது குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

இது தொடர்பாக மாவை சேனாதிராஜா மேலும் கூறுகையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளை தமிழ்தேசிய துக்க நாளாக பிரகடனப்படுத்தியமையில் ஒரு தவறும் இல்லை. ஆனால் அதனை தென்னிலங்கையில் தவறாக விமர்சிக்கின்றார்கள். 

இதனை ஒரு முரண்பாட்டுக்கான விடயமாக மாற்ற இடமளிக்க கூடாது என நாம் அரசாங்க த்தை கேட்டிருக்கின்றோம். இதற்கு மட்டுமல்ல தமிழ் மக்களுடைய நிலங்களை விடுவிக்கு ம்போதும் கூட பல விமர்சனங்கள் வந்தன. 

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஒருவர் முன்னர் கடற் படையில் இருந்தவர் அவர் கூறினார் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் படையினரிடமிருந்து காணி கள் விடுவிக்கப்படுவதாக விமர்சித்தார்கள். இவ்வாறான விமர்சனங்களுக்கும், 

நெருக்கடிகளுக்கும் இடமளிக்காமல் நாங்கள் செய்யவேண்டிய வேலைகளை செய்து கொண் டிருப்போம். 2011ம் தமிழ்தேசிய கூட்டமைப்பை அமெரிக்கா அழைத்து பேசியபோது போர்கு ற்றம் தொடர்பான பிரேரணை ஒன்றை கொண்டுவரவேண்டும்.

என்பது ஏற்கப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் ஒரு நாட்டின் மீது நேரடியாக அவ்வாறான தீர்மானத்தை கொண்டுவர இயலாத நிலையில் பின்னர் அந்த பிரேரணையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு அது ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்திற்கு வந்தது. 

ஆகவே பௌத்த பிக்குகளும், ராஜபக்ஷக்களும், தமிழ் மக்களுக்கு எந்தவொரு நல திட்டங் களும் கொடுக்கப்பட்டுவிட கூடாது. என்பதற்காக தீவிரமான கருத்துக்களை பரப்பி கொண் டிருக்கின்றார்கள். ஆகவேதான் இந்த விடயத்தை நாங்கள் 

மிகவும் நிதானமாக கையாளவேண்டும் என கூறியிருக்கின்றேன். மேலும் இந்த விட யத்தை அடிப்பைடயாக கொண்டு முரண்பட்ட நிலைகள், அல்லது தீவிரமான நிலைகள் உருவாக கூடாது. அதற்கு அரசாங்கம் இடமளிக்க கூடாது 

என்பதை நாம் அரசுக்கு கூறியுள்ளோம் எனவும் மாவை சேனாதிராஜா கூறியுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு