இலங்கை போராட்டக்காரர்களின் யுக்தியை கையாளும் ஈராக்கிய மக்கள்!! -அரச அரண்மனை முற்றுகை-
இலங்கையில் ராஜபக்ச அரசாங்கத்தை வெளியேறுமாறு கோரி மக்கள் நடத்திய தன்னெழுச்சிப் போராட்டத்தைப் போன்று ஈராக்கிலும் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈராக்கில் மதத் தலைவரான மொக்தாதா அல்-சதர் அரசியலில் இருந்து விலகுவதாக கூறியதையடுத்து, அவரது ஆதரவாளர்கள் நேற்று அரச அரண்மனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஒக்டோபரில் நடந்த தேர்தல்களில் குறித்த மதத் தலைவரின் அரசியல் கட்சி பாராளுமன்றத்தில் அதிக இடங்களைப் பெற்றது, ஆனால் பெரும்பான்மையைப் பெற போதுமானதாக இல்லை.
இந்நிலையில் அல்-சதர் ஈரானிய போட்டியாளர்களுடன் இணைந்து பணியாற்ற மறுத்ததால், இது ஒரு முட்டுக்கட்டை விளைவித்ததையடுத்து அங்கு போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.