SuperTopAds

74 வயது பெண்ணை திருமணம் செய்யும் 27 வயது இளைஞர்!!

ஆசிரியர் - Editor II
74 வயது பெண்ணை திருமணம் செய்யும் 27 வயது இளைஞர்!!

அமெரிக்கா நாட்டில் வசிக்கும் 74 வயதான பெண்ணும் 27 வயதான இளைஞரும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக தெரிவித்துள்ளமை அங்குள்ளவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

கெத்தி ஜேன்கின்ஸ் எனும் இப்பெண் டெக்ஸாஸ் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த வருடம் டெவோன் அவ்பிறே எனும் டெக்ஸாஸ் இளைஞரை இணையத்தளம் ஒன்றின் மூலம் சந்தித்தார்.

தற்போ 27 வயதான டெவோன் அவ்பிறேவும் 74 வயதான கெத்தி ஜேன்கின்ஸும் திருமண நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

தமக்கிடையிலான 47 வருட வயது வித்தியாசத்தை தாம் பொருட்படுத்தவில்லை என்கின்றனர்.

இவர்கள்  2 மணித்தியால பயணத் தூரத்திலேயே வசித்தனர். எனினும் நேரில் சந்திப்பதற்கு முதல் 4 மாதங்கள் இவர்கள் இணையம், தொலைபேசி மூலமாகவே உரையாடி வந்தனராம்.

அக்காலத்தில் கொரோனா தொற்று நோயினால் கெத்தி பாதிக்கப்பட்டிருந்தமையும் தனக்கு வாகனப் பிரச்சினை இருந்தமையும் இதற்கு காரணம் என்கிறார் டெவோன்.

கெத்தி இதற்குமுன் ஒருபோதும் உத்தியோகபூர்வ­ திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆனால், அவருக்கு 4 பிள்ளைகள் 13 பேரப்பிள்ளைகள். 36 பூட்டப்பிள்ளைகள், ஒரு கொள்ளுப்பேரன் ஆகியோர் உள்ளனர்.

டெவோன் 24 வயதில் ஒரு பெண்ணை திருமணம் செய்திருந்தார். 2021 ஆம் ஆண்டு கெத்தியை சந்திப்பதற்கு முன் விவகாரத்து செய்தார். அவருக்கு பிள்ளைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.