யாழ்.மாவட்டத்தில் பெரும்போக நெற்செய்கைக்கு தேவையான 4000 மூடை யூரியா வந்தடைந்தது!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் பெரும்போக நெற்செய்கைக்கு தேவையான 4000 மூடை யூரியா வந்தடைந்தது!

யாழ்.மாவட்ட பெரும்போக நெற் செய்கைக்கு தேவையான சுமார் 200 மெற்ரிக் தொன் யூரியா நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் வந்தடைந்தது.

ஒவ்வொன்றும் 50 கிலோ எடை கொண்ட 4000 மூடைகள் யாழ் கோண்டாவில் உள்ள விவசாய உரக் களஞ்சிய சாலையை வந்தடைந்தது.

வரவேற்குப் நிகழ்வில் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான அங்கயன் இராமநாதன் 

யாழ்.மாவட்ட கமநல உதவி ஆணையாளர் நிஷாந்தன் வடமாகாண பதில் விவசாய பணிப்பாளர் அஞ்சனாதேவி சிறீரங்கன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு