“இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எம் பிள்ளைகளுக்கு மரணச் சான்றிதழே தர முடியும் என்றால் கொலை செய்தவன் யார்???” உறவுகள் போராட்டம்..

ஆசிரியர் - Editor I
“இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எம் பிள்ளைகளுக்கு மரணச் சான்றிதழே தர முடியும் என்றால் கொலை செய்தவன் யார்???” உறவுகள் போராட்டம்..

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவினர்களால் நடத்தப்பட்ட போராட்டம் 2 ஆயிரமாவது நாளை எட்டியுள்ளதை குறிக்கும் வகையில் இன்று காலை கிளிநொச்சியில் பாரிய போராட்டம் ஒன்று நடத்தப்பட்டிருக்கின்றது. 

குறித்த போராட்டத்தில் உள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவ்ரகளின் உறவுகள், மக்கள் பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

வலிந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், தமது உறவுகளை தேடியும், நீதி கோரியும் தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 2000வது நாளான இன்று மாபெரும் போராட்டத்தினை இன்று முன்னெடுத்திருந்தனர்.

கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியானது, டிப்புா சந்திவரை சென்று அங்கு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதனை தொடர்ந்து நிறைவு பெற்றது.

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி மன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையகத்திற்கு மகஜர் ஒன்றினையும் அவர்கள் இன்றைய தினம் அனுப்பி வைத்தனர்.

குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன் மற்றும் எஸ்.கஜேந்திரன், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசம் ஸ்ராலின் உள்ளிட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், 

மத தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 


 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு