ஒரே நேரத்தில் 18 ஆண்களை காதலித்த கில்லாடி யுவதி!! -10.6 கோடி ரூபாவும் மோசடி செய்த சாதூர்யம்-
சீனா நாட்டில் ஒரே நேரத்தில் 18 ஆண்களை காதலித்து சுமார் இரண்டு மில்லியன் யுவான்களை மோசடி செய்த குற்றச்சாட்டில் யுவதி ஒருவரை அந்நாட்டில் ஷாங்காய் நகர பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே திருமணமான 29 வயதான இந்த யுவதி, 'வூ' எனும் குடும்பப் பெயரில் மட்டும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
எனினும் பெரும் எண்ணிக்கையான ஆண்களை காதலிப்பதாக நடித்து பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். இவர் ஒரு தருணத்தில் 18 ஆண்களை காதலித்து வந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஆண்கள் தனது காதல் வலையில் வீழ்ந்தவுடன், தனது குடும்ப அங்கத்தினருக்கு உதவுவதற்காக எனக் கூறி அவர்களிடம் பணம் கேட்பதை அவர் வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.
சுமார் 20 இலட்சம் சீன யுவான்களை (சுமார் 10.6 கோடி இலங்கை ரூபா) குறித்த யுவதி காதலர்களிடம் மோசடி செய்துள்ளார். இந்த யுவதிக்கு பணம் கொடுப்பதற்காக அவரை காதலித்த ஆண்கள் பலர் கடன்களையும் வாங்கியுள்ளனர். ஒருவர் தனது வீட்டையும் விற்றுள்ளார்.
காதலர்களில் சிலர் பதிவுத் திருமணம் செய்துகொள்ளலாம் எனக் கூறினால், பல காரணங்களைக் கூறி அதற்கு மறுத்து வந்துள்ளார். இதனால் அவரின் காதலர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு, பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்போவதாக அச்சறுத்தினால், தனது புதிய காதலர்களிடம் பணம் வாங்கி, பழைய காதலர்களின் பணத்தை திருப்பிக் கொடுத்துள்ளார்.
இதனால் மாட்டிக் கொண்ட குறித்த யுவதி தொடர்பில் காதலர்கள் சிலர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
2014 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இந்த யுவதிக்கு கணவர் மூலம் 2 வயதான ஆண் குழந்தையும் உள்ளது. ஷாங்காய் நகரிலுள்ள வாடகை வீட்டில் தனது கணவருடன் வசித்து வந்தவூ, தான் ஒரு பெஷன் மொடல் என காட்டிக்கொண்டார் என பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.