முன்னாள் போராளி வீட்டில் ஆயுதங்கள் இருப்பதாக கூறி விசாரணை..

தமிழீழ விடுதலை புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாக கூறி முன்னாள் போராளி ஒரு வருடைய வீட்டில் இலங்கை விமானப்படை யினர் சோதனை நடாத்தியுள்ளனர்.
கிளிநொச்சி, தர்மபுரத்தில் உள்ள முன்னாள் போராளி ஒருவரின் வீட்டிலேயே படையினர் அகழ்வு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இலங்கை விமானப் படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து, கிளிநொச்சி நீதிவான் மன்றில் அனுமதி பெற்று இந்தத் தேடுதல் நடத்தப்படுகின்றது என்று கூறப்படுகின்றது.