தொலைபேசி விற்பனை நிலையத்தை உடைத்து கொள்ளை! சந்தேகநபர் சிக்கினார், சுமார் 18 பாரிய கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவராம்...

ஆசிரியர் - Editor I
தொலைபேசி விற்பனை நிலையத்தை உடைத்து கொள்ளை! சந்தேகநபர் சிக்கினார், சுமார் 18 பாரிய கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவராம்...

தொலைபேசி விற்பனை நிலையத்தை உடைத்து சுமார் பல லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை திருடிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

நாரஹேன்பிட்டி பகுதியில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தினை உடைத்து இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில்  கற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையின்போதே 

சந்தேகநபர் குருந்துவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் நடத்திய விசாரணையில் திருடப்பட்ட 14 மடிக்கணினிகள், 

6 ஐ போட்கள், 3 ஸ்மார்ட் போன்கள், 3 ஹெட்செட்கள், ஒரு தொலைக்காட்சி பெட்டி, 3 ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.ச

ந்தேக நபர் வெலிகம பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடையவர் எனவும், கொழும்பில் 18 திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர் எனவும் தெரியவந்துள்ளது.

அவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இரு வருடங்களாக தீயணைப்பு வாகனத்தை திருத்த முடியாத யாழ்.மாநகர நிர்வாகம்..

மேலும் சங்கதிக்கு